யாழ். மற்றும் காங்கேசன்துறை பகுதியில் சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 72பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் அதனை தெரிவித்தார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 27பேர், மது போதையில் இடையூறு விளைவித்தவர்கள் 14பேர், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 10பேர், சுற்றுச் சூழல் மாசடையும் வகையில் குப்பைக் கூழங்களை வீசியவர்கள் 15பேர், அனுமதியின்றி மணல் ஏற்றியவர், சமாதானத்திற்கு எதிராக இடையூறு விளைவித்த இருவர், மாடு வெட்டிய ஒருவர் உட்பட 72பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.