ஒரு வாரகாலப்பகுதிக்குள் சுமார் 45 தமிழர்களை போலிக்குற்றச் சாட்டில் சட்டத்துக்கு முரணாக கைது செய்த சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு, நேற்று முன்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதியோடு செயற்பட்டு வருபவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணைக்கு அழைத்திருந்து.
அதேவேளை, தமிழர் தேசத்தின் அபிலாசைகளையும் அவலத்தையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தி வரும் மன்னார் ஆயர் வணகத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு தீவிர விசாரணைக்குட்படுத்தியிருந்து.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில மர்மமான முறையில தமிழர்கள் மரணமடைவது சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் காணாமல் போன 4 அகவைச சிறுமி உடலமாக மீட்கப்பட்டுள்ளார். மண்டைதீவைச்சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுரேந்திரன் சுதந்தினி என்பவரே காணாமல் போனதாகவும் அவரே நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடலம் மண்டைதீவு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அடுத்து, யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றுபொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தேஇ வட்டுக்கொட்டை சங்கரத்தை பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இந்தச் சடலம் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் வட்டுக்கோட்டையினைச் சேர்ந்த எஸ்.அரன்ரன் (வயது64) என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். குறித்த வயோதிபர் ஒரு மனநோயாளி எனவும் அவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதவான் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன், சடலத்தை யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார் இதேவேளை, இத்தகைய அச்சுறுத்தும் சம்பவங்களால் தமிழீழ மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக வடதமிழீழ நிருபர்களில் ஒருவர் தெரிவிக்கின்றார்.