செங்கல்பட்டு, காஞ்சீபுரம் பிரதான சாலையை ஒட்டியபடி அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது.
அங்கு நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் 2 பேரும். 38 இலங்கை அகதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 பேர் திடீர் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு ஏற்படாததால் 6-வது நாளாக நேற்று முன்தினமும் போராட்டத்தை தெடர்ந்தனர்.
அவர்களில் 5 பேர் மயக்கம் அடைந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.