செய்திகள்

பரந்தனில் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்.(படங்கள்)

நேற்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது பொலிசார் மிகமோசமாக கூட்டாக தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக பரந்தன் பகுதியில் பொலிசாருக்கும் மக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்தவுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் குகராசா, உபதவிசாளர் நகுலேஸ்வரன் உட்பட பிரதேசசபை மற்றும் கட்சி அங்கத்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரச்சனையை கேட்டறிந்துள்ளனர்.

தாக்கப்பட்ட இளைஞர்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரளுமன்ற உறுப்பினரின் வருகையையடுத்து தாக்கப்பட்ட இளைஞர்களிடம் காவல்துறையினர் மன்னிப்புக்கோரியுள்ளனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *