
அரசாங்கம் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களை இராணுவ மயப்படுத்த முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்தல் தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னம் மாணவர்களின் இயல்பு நிலைமையை பாதிப்பதாக அசங்க புளேகொட குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நெருக்கடிகளை எதிர்க்க மக்கள் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.