சிதம்பராக் கல்லூரிக்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்திற்கு ஆசிரியர் நியமனம்

வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் சிதம்பராக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.தி.சுபாகரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த) , க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Information and Communication Technology)   பாடத்தை தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஒரு வருடமாக ICT பாடத்திற்கு ஆசிரியர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  இவரின் வருகை ஒரு வரப்பிரசாதமாகும்.

எனவே இவ்வருடம் தரம் 10,11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய ஒரு பாடமாக ICT பாடத்தை தடங்கலின்றி கற்கலாம். மேலும்  க.பொ.த(உ.த)  2014,2015 ஆம் ஆண்டுகளில் தோற்றவுள்ள கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான  பிரிவு மாணவர்களும் தமது பிரதான பாடங்களில் ஒன்றாக ICT  பாடத்தை கற்று நல்ல உயர்கல்வி வாய்ப்புகளையும் சிறந்த வேலைகளையும் பெற்று பயனடையலாம்.

Leave a Reply

Your email address will not be published.