Search

சிதம்பரா கணிதப்போட்டி பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது

நேற்றுமாலை (07.02.2016 ) நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரும் June (2016) மாதம் நடைபெற இருக்கும் கணிதப்போட்டி தொடர்பான விடயங்களை திரு ரமேஸ் அவர்கள் எடுத்துக் கூறினார். தொடர்ந்து கணிதப்போட்டியில் பரிசில்களுக்கு தகுதியுடையவர்களுக்கான பரிசளிப்பு விழா வரும் September (2016) மாதம் நடைபெற்று முடிந்த பின்பு இவ் வருடம் December (2016) மாதம் பொதுக் கூட்டம் கூடுவதாகவும் அதில் கணிதப்போட்டிக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்வதாகவும் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

நடைபெற இருக்கும் கணிதப்போட்டிக்கான (2016) செயற்பாட்டாளர்கள் கூடுதலான தேவை இருக்கின்றது என்பதனையும் தெரியப்படுத்தியதை அடுத்து பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் தாம் உதவி புரிவதாக கூறினர், பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.




Leave a Reply

Your email address will not be published.