ஈராக்கில் சன்னி – ஷியா முஸ்லிம்களிடையே மதத்திருவிழாக்கள் நடத்துவதில் தேதி தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் ஷியா முஸ்லிம்களின் காலண்டரில் உள்ளபடி அர்பாயின் நினைவு தினம் கடைபிடிக்கப்படவுள்ளது.
இதை முன்னிட்டு சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள், ஈராக் தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட சில நகரங்களில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
குண்டுவெடிப்பு மற்றும் கார் குண்டுகள் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாயினர்.
பெரும்பாலானோர் பலத்த காயமடைந்தனர். மேற்கு ஈராக்கின் போராட்ட இயக்கம், ஆயில் மற்றும் பிராந்தியம் தொடர்பாக வடக்கில் உள்ள குர்தீஸ் பகுதிக்கும் இடையே அரசுக்கு பிரச்சினைகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.