
பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன. இச்சம்பவம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அமெரிக்காவின் துப்பாக்கி உரிமம் வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு, மூடிக் கிடந்த சாண்டி ஹுக் பள்ளி, இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் மூலமாகவும், பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பீதியிலிருந்து விடுபடாத தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் தைரியம் கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நினைவுகள், மாணவ – மாணவிகளுக்கு தோன்றாத வகையில், மேஜை நாற்காலிகளின் வரிசை மாற்றப்பட்டு, அழகிய சுவரோவியங்களுடன் கூடிய வர்ணப்பூச்சுடன், சாண்டி ஹுக் பள்ளி புதுப்பொலிவுடன் காணப்பட்டுகின்றது.