மாணவர்களை விடுதலை செய்ய மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில்

மாணவர்களை விடுதலை செய்ய மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில்

யாழ்.பல்கலைக்கழகத்தினை மீள ஆர்ப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் உயர் கல்வி அமைச்சர் திஸாநாகக்க தலமையில் இன்று காலை கொழுப்பில் நடைபெற்ற கலந்துரையடலும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

எனினும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பல்கலைக்கழகத்தினை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று அரச தரப்பு பல்கலைகழக நிர்வாகத்தினை வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் பயங்கரவாதக் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் விடுதலை செய்யப்டவேண்டும் என்றும், ஏனைய மாணவர்களுடைய பாதுகாப்பும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பல மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அரச தரப்பினால் வலியுறுத்தப்பட்ட விடையங்களை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஏற்க மறுப்புத் தெரிவித்தும், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரச தரப்பு உறுதிமொழிகள் எதனையும் வழங்காததை அடுத்து எந்தவிதமாக ஆக்கபூர்வமாக முடிவுகளும் எடுக்கப்படாமல் மேற்படிக் கலந்துரையாடல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசாதராண சூழலுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துரசிங்கவும், பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் தாக்குதல் நடத்தியது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டு சம்மந்தமில்லாத விடையங்களை பேசியும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரை மிரட்டும் விதத்தில் கருத்துக்களை முன்வைத்ததாலும் மேற்படிக் கலந்துரையாடல் அர்தமற்றுப் போயிருந்தது என்று அக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மேலும் மாணவர்கள் மீது பழியைச் சுமத்தும் முகமாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்திணம் பல்கலைகழகத்தினை ஆரம்பித்தாலும் மாணவர்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் ஒத்துழைத்தால் தாம் உடனடியாக பல்கலைக்கழகத்தினை ஆரம்பிக் தயாராக உள்ளோம் என்றும் கருத்தினை முன்வைத்தார்.

இக் கருத்தானது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே  துணைவேந்தர் கூறினார் என்றும், மாணவர்கள் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவும், கைது செய்யவும் ஏதுவாக அவரது அருத்து அமைந்துள்ளது என்றும் மேற்படிக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பீடாதிபதிகள் மேலும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.