மிகவும் நெருக்கமாகவும் நாளாந்த பராமரிப்பு அற்ற முறையில் வல்வையின் மாணவருக்கு நோய் தரும் வண்ணம் கிடந்த கழிப்பறைகள் அகற்றப்பட்டு புதிய காற்றோட்டமுள்ள இலகுவான பராமரிக்க கூடிய கழிப்பறைகள் அமைக்கும் வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. வல்வை மக்களாலும் பாடசாலை சமூகத்தின் வேண்டுதலை கருதித் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் CWN வேகமாக இத் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதற் கட்டமாக பெண்கள் கழிப்பறை முற்றாக உடைத்து அகற்றப்படுகின்றது.
இங்கு போதுமான இட வசதியுடன் கூடிய காற்றோட்டமுள்ள புதிய கழிப்பறை அமைக்கப்படவுள்ளது.
அத்துடன்
புதிய கழிப்பறைக்கு தேவையான கட்டிட பொருட்கள் தருவிக்கபட்டு நாளை கட்டு வேலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேற்படி சமூகம் எது வல்வைக்கு வாழ்க்கைக்கு தேவை என்பதை சிரத்தில் கொண்டு இக் கழிப்பறைகளை தினமும் கழுவி சுத்தமாக வைத்திருக்கும் என்று CWN எதிர்பார்கிறது.