Search

சென்னை நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களை வென்று வல்வைச் சிறுமி சாதனை!

சென்னை நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களை வென்று ஈழச் சிறுமி சாதனை!

சென்னையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் ஈழச் சிறுமி தனுஜா ஜெயக்குமார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற டொல்பின் நீச்சல் பயிற்சி மையத்தின் சார்பில் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி, கல்லூரிகளுக்கிடையேயான நீச்சல் போட்டிகளில் தனுஜா 10 வயது பிரிவில் பங்கேற்று நான்கு பதக்கங்களை வென்றுள்ளார்.

50 மீட்டர் Butter Fly Stroke பிரிவில் 38.79 வினாடிகளில் குறித்த தூரத்தைக் கடந்து முதலாவதாக வந்து தங்கத்தை தனதாக்கிய தனுஜா 4 x 50 மீட்டர் Free style தொடர் நீச்சல் போட்டியிலும் முதலிடம் பெற்று திருச்சி SRM அணி சார்பில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

இது தவிர, 50 மீட்டர் Free style பிரிவில் 35.45 வினாடிகளில் குறித்த தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ள தனுஜா 50 மீட்டர் Bake stroke பிரிவு நீச்சல் போட்டியில் 43.03 வினாடிகளில் குறித்த தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் வசித்துவரும் தமிழீழம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் பிடித்து தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிக்கு தமிழ்நாட்டின் சார்பில் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான 20 ஆவது ஆண்டு பாலமுருகன் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *