இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு மேலும் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின், கூடுதலான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான பிரதிநிதி அன்டானியோ கட்டாரஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு திரும்புவது உசிதமானது என புகலிடக் கோரிக்கையாளர்கள் மனதில் நம்பிக்கை ஏற்படக் கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்து பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்க்காணலின் போது கருத்துரைத்த கட்டர்ஸ்,
வாழ்க்கைத் தரம், தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சொத்துக்கள், பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலகமாக இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.