ஈழத்தில் இனக்கொலை – இதயத்தில் இரத்தம் – புத்தகமும் இறுவெட்டும் மும்பையில் மராத்திய மொழியில் வெளியீடு

ஈழத்தில் இனக்கொலை – இதயத்தில் இரத்தம் என்ற புத்தகமும் இறுவெட்டும், நேற்று மும்பையில் மராத்திய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராம் ஜெத்மலானி (Ram Jethmalani) தலைமையில் இந்த வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

இவ்விடயம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்துரைத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கையில் ஈழத்தமிழர்களையும், கடலில் தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்ககும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆதரவளிப்பது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் மத்திய பிரதேசத்திற்கு சிறீலஙகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றவேளை நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலயை இந்தியா முழுவதும் உணரச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக வைகோ குறிப்பிட்டார்.

இதன்பிரகாரம், குறித்த புத்தகமும் இறுவட்டும் கடந்த நவம்பர் 26ம் திகதி, ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.