மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது
இந்த இறுதிப்போட்டியில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை சைனீஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் 12 ஓவர் முடிவில் 87 ஓட்டங்களை எடுத்தது. 88 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் புகுந்த உதயசூரியன் விளையாட்டுக் கழகம் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களை எடுத்தது. இதனால் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் 16 ஓட்டங்களினால் வெற்றியீட்டி வெற்றி கிண்ணத்தையும் சுவீகரித்துக்கொண்டது.














