இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடும் போராட்டங்கள் மத்தியில் இன்று வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வெற்றி பெரும் என்ற கோணத்தில் போய்க்கொண்டிருந்த போது கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. 140 க்கு மேல் ஓட்டங்கள் எடுத்த போது இந்திய வீரர்கள் விக்கெட்டை சரித்து பாகிஸ்தானை தோல்விக்கு தள்ளினர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் 50 ஓவர்களில் 157 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 43 .4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.