சென்னை விமானத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பெண் கைது செய்யப்படடுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கை சேர்ந்த பாத்திமாவின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பெண் அதிகாரிகள் பத்திமாவை அழைத்து சோதனை செய்தனர்.
அதில் உள்ளாடையில் 400 கிராம் எடை உள்ள தங்க பிஸ்கட்டுகள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை சுங்கா இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.