வல்வை செய்திகள்

இலங்கை தமிழர் திருச்சியில் தூக்குப்போட்டு தற்கொலை!

திருச்சி உறையூர் வயலூர் ரோடு ராமலிங்க நகரை சேர்ந்தவர் ஞானகுரு (வயது 70). இலங்கை தமிழரான இவர் தனது மனைவி பத்மாதேவியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து திருச்சி வந்தார்.

இந்த தம்பதியினரின் மகன் அசோக், மகள் ஹேமா ஆகியோர் ஆஸ்ரேலியா நாட்டிலும், மற்றொரு மகன் ராஜ்குமார் டென்மார்க் நாட்டிலும் படித்து வருகின்றனர். ஒரு மகனுக்கு 13 வயதிருக்கும் போது அவனை இலங்கையில் இழந்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த திங்கள் மாலை மனைவி பத்மாதேவி பொருட்கள் வாங்க வெளியில் கடைக்கு சென்றார். அப்போது ஞானகுரு வீட்டில் தூக்கில் தொங்கினார். கடைக்கு சென்று திரும்பிய பத்மாதேவி இதனைக் கண்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஞானகுருவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஞானகுரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்து அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து உறையூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மகள், மகன்கள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் ஞானகுரு மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *