இலங்கை யாழ்.வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் திரு.வைரமுத்து ஞானகுரு அவர்கள் 21.03.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வைரமுத்து பூரணலட்சுமி தம்பதிகளின் மகனும் சிவசுப்பிரமணியம் (பேபி சோடா கம்பெனி, வல்வெட்டித்துறை) கோசலையம்மாள் தம்பதிகளின் மருமகனும், பத்மாதேவியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற அரவிந்தன், அசோக்குமார்(அவுஸ்ரேலியா) ஹேமா(அவுஸ்ரேலியா) ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காயத்திரிதேவி, துஷியேந்திரன், துவாரகா ஆகியோரின் மாமனாரும், பவித்திரன், சந்தோஷ், ஆதிரா, அபிரா, ரியாஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் 25.03.2016 (வெள்ளிக்கிழமை) இன்று மாலை 4:00 மணியளவில் நடைபெற்று ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்.
இல.5, 5 வது குறுக்குத்தெரு, இராமலிங்க நகர், தெற்கு விஸ்தரிப்பு, வயலூர்ரோடு, திருச்சி-17.
செல் : 0091-9843942828










