கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப் பணிகள்தற்போது முதலாம் கட்ட வேலைகளின் இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ளது.

கணபதி  பாலர்  பாடசாலையின் கட்டடப் பணிகள்

=========================================

நடைபெற்றுக்  கொண்டிருக்கும்  கணபதி  பாலர்பாடசாலையின்  கட்டடப் பணிகளில்  தற்போது  முதலாம் கட்டவேலைகளின் இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ளது.

மூன்று  கட்டங்களாக  நடைபெறும்  இவ்வேலைத்திட்டத்தின்  முதற்கட்டமான அத்திவாரமிடுதலும்,  தூண்போடுதலும் நிறைவடைந்து  தொடர்ந்து  மண் நிரவுதல் முன்னெடுக்கப்படவுள்ளது அத்துடன் கிணறும் புனரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தொடர்து இரண்டாம்  கட்டமாக  கீழ்த்தள  பாலர் பாடசாலை வேலைகளும்,  மூன்றாம்  கட்டமாக மேல்த்தள  மண்டப  வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாலர் பாடசாலையானது நவீன கற்றல் செயற்பாடுகளுக்கு ஏதுவாக கணனிப்பிரிவு (Computer Unit) கட்புல, செவிப்புலஅலகு (Audio, Video Unit), பாலர் பூங்கா மற்றும் அலுவலகம் என்பவற்றினை உள்ளடக்கியதாகஅமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே  வல்வை நெடியகாடு கணபதி  படிப்பகத்தின்  அங்கத்தவர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் மற்றும்  கணபதிபாலர்  பாடசாலையின்  பழைய  மாணவர்கள் அனைவரிடமிருந்தும்  பெரும்  நிதிப்பங்களிப்பினை  மிகவும்  தயவாக வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

தொடர்புகளுக்கு:-

திரு.பூ.அகமணிதேவர்;  (0094-771028837)  தலைவர், கணபதிபடிப்பகம்.

திரு.சி.மதுசூதனன்;  (0094-779037107)  செயலாளர், கணபதிபடிப்பகம்.

மின்னஞ்சல் : : kanapathyreadingroom@gmail.com

1 copy 2 copy 3 copy 4 copy 5 copy 6 copy 7 copy 8 copy

 

Leave a Reply

Your email address will not be published.