வல்வை சிதம்பராக் கல்லூரியில் 31.12.2012 அன்று நடைபெறவிருந்த பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டமானது திடீரென மாசி மாதம் 10ம் (10.02.2013) திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறியத்தரும்படி பழைய மாணவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் .
வருடந்தோறும் கூட்டப்படவேண்டிய கூட்டம் கூட்டப்படாமலும், கணக்கறிக்கை உரிய முறையில் சமர்ப்பிக்கப்படாமலும் உள்ள நிலையில், இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டமும் உரிய காரணம் எதுவும் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது ஏன் என்பதை அறியத்தருமாறும், ஒத்திவைக்கப்பட்ட பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டத்தை வெகுவிரைவில் நடாத்துமாறும் பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இது தொடர்பான மேலதிக விபரத்தினை கீழே பார்வையிடலாம்…