மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாகவும், அடிமையாகவும் உள்ளவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத் தெரிவித்துள்ளார்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலககோரி, புரட்சிபடையினர் கடந்த 22 மாதங்களாக போராடி வருகின்றனர். இவர்களை சிரிய இராணுவம் ஒடுக்கி வருகிறது.
புரட்சிபடையினருக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருவதால், பல நகரங்களை கைப்பற்றியுள்ளதுடன் இராணுவ தளங்களையும் தகர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அசாத் டமாஸ்கஸ் நகரில் உள்ள அரங்கொன்றில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நான் பதவி விலக வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.
வெளிநாடுகளின் தூண்டுதலால் சிரியா தற்போது போர்க்களமாக உள்ளது, ஒருவரையொருவரை கொல்லும் நிலை உள்ளது.
எதிர்தரப்பினருக்குத் தெரிந்ததெல்லாம் பயங்கரவாத மொழி தான். அவர்களுடன் நாங்கள் எப்படி பேசுவது.
மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாகவும், அடிமையாகவும் உள்ளவர்களுடன் பேச்சு நடத்த முடியாது, அறிவுப்பூர்வமானவர்களுடன் தான் பேச முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கு அமெரிக்காவின் வெளிவிவாகர பெண் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் கூறுகையில், சிரியா ஜனாதிபதி அசாத்தின் பேச்சு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது என்றும், மக்களின் மாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.