பிரிட்டன் பொலிசார் விரட்டியதில் 13 வயது சிறுமி பலி

லண்டனில் 13 வயது சிறுமி, தன் பெற்றோரோடு காரில் வந்து கொண்டிருந்த போது அவர்களது காரை விரட்டியபடியே பொலிசாரின் பியூஜியோ 308 என்ற வண்டி வேகமாக வந்தது.

நியு கிராஸில் உள்ள இல்டெர்ட்டன் சாலையில் பின்னால் வந்த பொலிஸ் வண்டி தன் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியது.

இந்த விபத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் உயிரிழந்தார். இத்தகவலை ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் தெரிவித்தனர்.

இறந்த போன பெண்ணின் பெற்றோரும் சகோதரரும் சிறுகாயங்களோடு உயிர் தப்பினர்.

விபத்து தொடர்பாக பொலிசார் கார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.

போக்குவரத்து பொலிசாரும் பணித்தரம் இயக்குநரகமும் இணைந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.