பிரிட்டனின் இளவரச தம்பதியான வில்லியம்- கேட் மிடில்டனுக்கு அரண்மனையை பரிசாக வழங்க ராணி எலிசபெத் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்திற்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துகளுக்கு அதிபதியாக ராணி எலிசபெத் இருக்கிறார்.
இவற்றில், லண்டன் சந்திரிகாம் பண்ணையில் உள்ள அழகிய ஆன்மர் அரங்கை வில்லியம்- கேட் மிடில்டனுக்கு பரிசாக வழங்க ராணி எலிசபெத் திட்டமிட்டுள்ளார்.
தங்கள் முதல் வாரிசுக்காக காத்திருக்கும் வில்லியம் தம்பதிக்கு, இது ஒரு நினைவுப்பரிசாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கு தான் வில்லியம்- கேட் இருவரும் திருமணத்திற்கு பிறகு முதலாவது கிறிஸ்துமசை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.