வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த இரு மீனவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க சமாசனங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். கடற்பரப்பில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மயிலிட்டித்துறையில் இருந்து 4 படகுகளும், பொலிகண்டித் துறையில் இருந்து சென்ற இரண்டு படகுகளுமே இவ்வாறு கரை திரும்பவில்லை
பிந்திக் கிடைத்த தகவலின்படி குறித்த ஆறுபடகுகளில் 12 மீனவர்கள் உள்ளதாகவும், தற்போது இரண்டு படகுகள் கரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.