Search

சிரியாவில் உணவு இன்றி 10 லட்சம் பேர் தவிப்பு

சிரியாவில் அதிபர் பஷர்அல் -ஆசாத் பதவி விலக கோரி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அங்கு சண்டை நடந்து வருகிறது. 22 மாதங்களாக நடந்து வரும் போரில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

முக்கிய நகரங்களில் சண்டை நடப்பதால் அத்தியாவசிய பொருட்களின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. சண்டை காரணமாக தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வேலையின்றியும், உணவு இன்றியும் மக்கள் தவிக்கின்றனர்.

ஐ.நா. சபை வழங்கும் உணவை பயன்படுத்தி வருகின்றனர். சிரியாவில் தவிக்கும் 25 லட்சம் பேரில் 15 லட்சம் பேருக்கு ஐ.நா. உணவு வழங்கி வருகிறது. 10 லட்சம் பேருக்கு உணவு வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. எனவே இவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.