முன்னணி இணைய உலாவியான Firefox – இனை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Mozilla நிறுவனமானது கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ZTE உடன் இணைந்து புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
Firefox OS என பெயரிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இயங்குதமளாது கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ள அன்ரோயிட் இயங்குதளத்திற்கு சவாலாக விளங்கும் என்றும் Mozilla நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.