குழந்தையைப் போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ

உயிருள்ள குழந்தையைப் போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ ஒன்றை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் தலைநகர் லண்டனிலிருந்து வெளியாகும் “டெய்லி மெயில்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:÷””கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் ஹான்சன், இந்த புதிய வகை ரோபோவை உருவாக்கியுள்ளார். ஒன்றரை வயது குழந்தையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு டியாகோ சான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உயிருள்ள குழந்தையைப் போன்று அழுவது, புன்னகைப்பது, கோபப்படுவது, குழப்பம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த வசதியாக நெகிழும் தன்மையுள்ள பிளாஸ்டிக்குகளைக் கொண்டு முகம் உருவாக்கப்பட்டது.

இது தொடர்பாக டேவிட் ஹான்சன் கூறுகையில், “”போரில் ஈடுபடுத்தும் வகையில் உருவாக்கப்படும் ரோபோக்களை விட, இதுபோன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியவை தான் மிகவும் முக்கியமானது.

இந்த ரோபோவுக்கு செயற்கை நுண்மதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.