Search

மாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கினால் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இப்பாலத்தின் ஊடாக பயணம்செய்யும் ஈரளக்குளம், பெரியவெட்டுவான், இலுக்குப்பொத்தானை, ஆவட்டியாமடு, குரகன்னாமடு, புலுட்டுமாவோடை, அகத்தியர்மடு, முல்லிப்பொத்தானை, நவுந்தனியமடு, போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மாவடிஓடை பாலத்திற்கு அப்பால் பல ஆயிரக்கணக்கான கால்நடைகள், விவசாய நிலங்களும் இருக்கின்றபடியால் இப்பாலத்தின் ஊடான போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நிலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் இப்பாலம் இரண்டாக பிளவுபட்டு இப்பாலத்தின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பாலத்தை பயன்படுத்தும், விவசாயிகள்,கால்நடைவளர்ப்பாளர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பாலத்தினை உடனடியாக திருத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *