வல்வை ஒன்றியம் ஜெர்மனிக்கிளையின் குளிர்கால ஒன்றுகூடல் 06-01-2013அன்று 12.00மணிக்கு அகவணக்கத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி நிகழ்வுகள் ஆரம்பமாகின. அங்கு சிரியவர்களினதும்,இளையவர்களினதும் தனி நிகழ்சிகளும்,நடன இசை நிகழ்வுகளும்,வெளிநாட்டவர்களின் கலாச்சார இசை நிகழ்வில் இரண்டாமிடம் கிடைத்த நிகழ்வும்,புதிய உபசெயலாளரும் தெரிவு செய்யப்பட்டார்.வாசனை மறவாத தமிழ் உணவுவகைகள் அனைவராலும் கொண்டுவரப்பட்டு மதியமும்,இரவும் பரிமாறப்பட்டது.சந்தோசமான ஊர் நினைவுகளோடு குளிர்காலத்தை ஜெர்மனி வாழ் வல்வை மக்கள் சந்தோசமாக இரவு மணிக்கு நிறைவு செய்தார்கள்.