வல்வை வேவில் இளைஞர்களினால், இன்று 35 அடி மற்றும் 25 அடி உயரமான பட்டங்கள், வேவில் பிள்ளையார் மற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் ஏற்றப்பட்டது.
இந்த பட்டம் பறக்கவிடும் காட்சியை பார்பதற்காக யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் நெல்லியடி போன்ற பிரதேசங்களிலிருந்து இடங்களிருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இன்று பிற்பகல் உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறும் வினோத பட்டப் போட்டியினையும் கண்டு களிப்பதற்காக வல்வெட்டித்துறையில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.