யாழ். நகரில் நடந்த பேராட்டம் மீது சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களால் கழிவு ஒயில் வீச்சு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக்கோரி யாழ். நகரத்தில் இன்று கையெழுத்துப் பெறும் போராட்டம் இடம்பெற்றது. முன்னிலை சோசலிச கட்சியின் துணை அமைப்பான சமஉரிமை இயக்கம் இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. எனினும் படையினரால் நடத்தப்பட்ட கழிவு ஒயில் வீச்சை அடுத்து பேராட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது.

அங்கு செய்தி சேகரிப்பதற்காக நின்ற யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள் மீதும் படைப்புலனாய்வாளர்கள் கழிவு ஒயில்களை வீசியுள்ளனர்.

யாழ். பஸ்நிலையத்தின் ஓரத்தில் பதாகைகளைக் கட்டி வைத்து அதில் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது. போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு சாதாரண உடையில் வந்த படைப் புலனாய்வாளர்கள் பதாதைகள் மீதும் அங்கு நின்றவர்கள் மீதும் விசமத்தனமாக கழிவு ஒயிலை வீசி எறிந்துவிட்டுத் தப்பி விட்டனர்.

இதனை அடுத்து கையெழுத்துப் பெறுவதைப் போராட்டக்காரர்கள் நிறுத்திக் கொண்டார்கள். முன்னதாக இன்று காலையில் தாம் தங்கியிருந்த விடுpயில் நிறுத்தி கை;கப்பட்டிருந்த தமது வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜனநாயக ரீதியில் அமைதியாக ஒரு பேராட்டத்தைக்கூட யாழ்ப்பாண நகரத்தில் நடத்த முடியவில்லை என்பதையே இந்த அசிங்கமான செயல்கள் எடுத்துக் காட்டுகின்றனர் என்று சம உரிமை இயக்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

காலை 10 மணியளவில் கவனஈர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது. இளைஞர்கள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஆர்வமாக அதில் கையெழுத்திட்டனர். தாய்மாருடன் வந்த குழந்தைகளும்கூட ஆர்வத்துடன் தமது கையெழுத்துக்களைப் பதித்துச் சென்றனர்.

இந்த அரசாங்கம் மனிதாபிமானம் அற்று நடக்கிறது என்று கையெழுத்திட்ட தாய் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். ”யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது ஒரு மனித உரிமை மீறல். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்றார் அவர்.

யுhழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பது, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து, வடக்கு கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்து, கடத்தல் மற்றும் கைதுகளை உடனடியாக நிறுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள் ஆகிய கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தியே தாம் இந்தக் கவனவீர்ப்புப் பேராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர் என்று சமஉரிமை இயக்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.








Leave a Reply

Your email address will not be published.