ஆண்டறிக்கை 2012-2013
‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்: மற்று அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்ற குறளுக்கமைய எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும். அவ்வுயர்வு கை கூடா விட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது. கடந்த வருட வெற்றிகளையும் முயற்சிகளையும் கைவிடாது தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த வெற்றியை தக்கவைப்பதற்காக அனைத்து விதத்திலும் உதவி புரிந்த அனைத்து வல்வை உறவுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்படி வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) வருடாந்த பொதுக்கூட்டம் 12.02.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை இலண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள வல்வை அரங்கத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
தலைவர் உரையைத்; தொடர்ந்து செயலாளரினால் சென்ற கூட்ட அறிக்கையும், ஆண்டறிக்கையும் அதனைத் தொடர்ந்து பொருளாளரினால் ஆண்டுக் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு சபையினரால் விவாதத்தின் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து புதிய நிர்வாகசபையின் தலைவராக திரு த.உதயணன் உபதலைவராக. திரு.ந.முகபத்லால்நேரு. செயலாளராக திரு பா. ஞானச்சந்திரன்;. உபசெயலாளராக திரு க.சிதம்பரதாஸ் பொருளாளராக திரு.ம.சிறீதரன் உப பொருளாளராக திரு.ந.உதயகுமார் நிர்வாகசபை உறுப்பினர்களாக திரு.பா.ரிசிச்சந்திரன். திரு.க.பிறேமச்சந்திரன். திரு உ.கதிரவன் தி தெ.நிவாசர் மற்றும் திரு.ச.லவதீபன் ஆகிய அனைவரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
எமது நிர்வாகசபை தனது பதவிக்காலத்தில் பதினொரு நிர்வாகசபைக் கூட்டங்களை இனிதே நடத்தி முடித்திருக்கின்றது. மற்றும் குறிப்பிடத்தக்க விடயமாக பிரித்தானியாவில் தமிழர்களால்; தற்போது நடாத்தப்பட்டு வருகின்ற உதைபந்தாட்டப் போட்டிகளில் முதல்த்தரமான கோடைவிழாவினை இருபதிற்கும் மேற்ப்பட்ட அனுசரணையாளர்களின் ஆதரவுடன் மட்டுமல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து சிறப்பித்தமை வல்வை மக்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) கடந்த சில வருடங்களாக வல்வை ஒன்றியத்தினூடாக செய்து வந்த வாழ்வாதரக் கொடுப்பனவுகளுடன் இந்த ஆண்டு இந்தியா மண்டபம் முகாம் வல்வை விளையாட்டுக் கழகத்தின் பரிசளிப்பு விழாவிற்கும், இலண்டன் ரூட்டிங் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கும், வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் (ஐஇ). உண்ணா விரதத்திற்கான விளம்பரச் செலவு மற்றும் வல்வை சிதம்பரக் கல்லூரியின் தளபாடங்களுக்கான செலவினையும் இந்த நிர்வாகம் பொறுப்பேற்று செவ்வனே செய்துள்ளது.
அத்தோடு முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவாக பூரணம் முதியோர் உதவித்திட்டத்தின் மூலம் முப்பதிற்கும் மேற்ப்பட்ட முதியோர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக தலா 1000.00 ரூபாவும்; தொடர்ந்து (2010 யூலை முதல்) மற்றும் மரணச்சடங்குச் செலவுக்காக நால்வருக்கு தலா 10000.00 ரூபாவும் வல்வை நலன்புரிச் சங்கத்தின் ஊடாக (ஐ.இ) வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புண்ணிய காரியத்தைத் தொடர்ந்து செய்து வருகின்ற திரு. இ.தெய்வேந்திரன் அவர்களுக்கு வல்வை நலன்புரிச் சங்கம் (ஐஇ) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.மற்றும் கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் வல்வையரின் வாரிசுகள் கல்வியில் ஊக்கம் காட்ட வேண்டும் என்ற நோக்கத்;தில் இங்கு எம்மால் நடாத்தப்படுகின்ற குளிர்கால ஒன்று கூடலில் தமிழ், 1110இ புஊளுநுஇ யுளுஇ ல் திறமைச்சித்தி அடைந்தவர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுகலைப்பட்டம் முடித்தவர்களுக்கும், கலா நிதிப்பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் மொத்தமாக நூற்றி ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்து வல்வையர்கள் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.வல்வை மக்களால் வல்வை மக்களுக்காக நடாத்தப்பட்ட டீடீஞ புநவ வழபநவாநச நிகழ்வு பல ஆண்டுகளிற்குப்பின்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த நிகழ்விற்கு உதவிசெய்த அனைவருக்கும் வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளின்றது.
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆதரவுடன் ஊறுN ஆல் நடாத்தப்பட்ட சிறார்களுக்கான கணிதப் போட்டியையும் அதன் பரிசளிப்பு விழாவையும் திறம்படச் செய்து முடித்தது பெருமைப்படக் கூடிய விடயமாகும்.
டீடரந டiநெ நண்பர்களின் பெரு முயற்சியால் நடாத்தப்பட்ட இன்னிசை மாலை நிகழ்ச்சிக்கு வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) தனது ஆதரவை வழங்கியது. இந்த நிகழ்வை பல சிரமங்களுக்கு மத்தியிலும் மற்றவர்கள் பிரமிக்கும் வண்ணம் வல்வையரின் நிர்வாகத்திறனை மீண்டும் உறுதி செய்ததுடன் £2500.00 களை சங்கத்திற்கு வழங்கியமை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை நிகழ்வுகளையும் திறம்படச் செய்து முடிப்பதற்கு தேவையான பொருளாதார வலுவை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இன்றய கடினமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இன்று எமது சங்கத்தின் நிர்வாகிகள் £50இ342.25 ஐ எமது சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளனர். இந்நிதியை இனிவரும் காலங்களில் வரும் நிர்வாகத்தினரும் மேலும் பெருக்கி சங்கத்திற்கு ஒரு நிரந்தர இடத்தை வாங்க ஆவன செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது சங்கத்தின் செயற்பாடுகள் ஊரைச்சார்ந்து இருப்பது யாவரும் அறிந்த விடயமாகும். இனிவரும் காலங்களில் எமது செயற்பாடுகள் தமிழீழத்தில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பரந்து பட்டு இருக்க வேண்டும், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களையும், முதியவர்களையும், மற்றும் விதவைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுததலுக்கான செயற்திட்டங்களையும் சங்கம் திடமாக முன்னெடுக்க வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
அன்பான உறவுகளே இனிவரும் நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தையாவது ஒதுக்கக் கூடியவர்களும், இளைஞர்களும், யுவதிகளும், ஊரின் பால் அக்கறை கொண்டவர்களும், தேசப்பற்றாளர்களும், ஒரு பரந்துபட்ட நிர்வாகமாகவும், முழுமனதுடன் நிர்வாகத்தில் அங்கம்; வகிக்கக் கூடியவர்களும் மற்றும் சிறந்த நிர்வாகத் திறமை உடையவர்களும் பங்கேற்பதன் மூலம் ஒரு பலமான வல்வை சமுதாயத்தை புலம்பெயர்நாட்டில் மிகச்சிறப்புடன் கட்டி எழுப்ப உறுதி பூணுவோம்.
‘வல்வையனென்று சொல் தலை நிமிர்ந்து நில்’
நன்றி
செயலாளர்.
திரு.பா.ஞானச்சந்திரன்.