அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இராட்சத பாம்புகளைப் பிடிப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்தப் போட்டி பெப்ரவரி மாதம் 10ம் திகதி வரை நீண்டு செல்லும். இந்தக் காலப் பகுதியில் ஆகப் பெரிய பாம்பைப் பிடிப்பவர்களிற்கு 1.500 டொலர்கள் வழங்கப்படும்.
மலைப்பாம்பு என வெப்பவலய நாடுகளில் அழைக்கப்படும் இந்தப் பாம்புகள் இராட்சமாக வளரக்கூடியன. புளோரிடாவின் ஆற்றுநிலம் மற்றும் சேற்றுப் பகுதிகளில் இந்தப் பாம்புகளின் தொகை அதிகரித்துள்ளதால் இந்த பாம்புகள் காடுகளில் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மிருகங்கள் அணைத்தையும் தமக்கு உணவாக்குகின்றன.
இதனால் ஏனைய மிருகங்களின் தொகை குறைந்து வருவதனால் இந்தப் பாம்புகளின் தொகையை அரசு இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் குறைத்து வருகிறது.
800 பேர் இந்தப் போட்டியில் பங்கு பற்றுகின்றனர். வேட்டைத் துப்பாக்கி. கைத்துப்பாக்கி. வாள். கத்தி என்பனவற்றுடன் வேட்டையில் ஈடுபடும் இவர்கள் இந்த ஒரு மாத காலத்திலும் வேட்டையாடும் பாம்புகளில் நீளமான பாம்பைப் பிடிப்பவர்களிற்கு பரிசு வழங்கப்படும்.