பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. ‘கேம் ஓவர்’ என்னும் இணைய ஹெக் செய்வோரினால் இந்த இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது. இணைய தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதுடன், இணையப் பயன்பாட்டாளர்களின் ஆயிரக் கணக்கான தரவுகளும் களவாடப்பட்டுள்ளன.
ஹெக் செய்யப்பட்ட இணையப் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இணைய தளம் இன்னமும் முழுமையாக இயங்கத் தொடங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னதாக 22 அரச இணைய தளங்கள் ஹெக் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷைச் சேர்ந்த இணைய ஹெக்கர்கள் இந்த இணைய தளங்களை ஹெக் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.