அமெரிக்காவில் எரிகற்களால் உருவான பெரிய பள்ளத்துக்குள் விழுந்த நபர், கடும் போராட்டத்திற்கு பின் மீ்ட்கப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் நபர் பர்மிந்தர் சிங்(வயது 28).
இவர் அரிசோனா மாகாணத்திற்கு 11ம்தேதி சென்றார். வானத்தில் இருந்து விழுந்த எரிகற்களால் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளங்கள் அரிசோனாவின் வடக்கு பகுதியில் உள்ளன.
இந்த பள்ளங்களை சுற்றி மிகப்பெரிய இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது ஏறிய பர்மிந்தர் சிங், ஒரு மைல் ஆழமுள்ள பள்ளத்துக்குள் வழுக்கி விழுந்தார்.
பள்ளத்தில் சிக்குண்ட பர்மிந்தரை பார்த்த ஊழியர்கள், மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், எட்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.
கடவுளைத் திருப்திப்படுத்த, இறைவனுக்கு உயிரை அர்ப்பணிக்கும் விதத்திலேயே அவ்வாறு குதித்ததாக பர்மிந்தர் சிங் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஃபிஸாக் ஸ்டாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பர்மிந்தர் சிங்கின் உடல்நிலை நன்றாக உள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.