செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேர் கைது!

செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி நேற்றிரவு குறித்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் நேற்று 25ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்தும் இவர்கள் சிறப்பு முகாமில் இருந்து மாற்ற வேண்டும் என்றும், தங்களை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என உறுதியாக இருந்துள்ளனர்.

இதனையடுத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.