அதிநவீன இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்வதில் முதல்வனாக விளங்கும் Sony நிறுவனமானது Xperia Tablet Z எனும் தனது புதிய சாதனத்தை ஜனவரி 22ம் திகதிளவில் அறிமுகப்படுத்தக்காத்திருக்கின்றது.
1920 x 1080 Pixel Resolution மற்றும் 10.1 அங்குல HD தொடுதிரையினைக் கொண்ட இந்த சாதனங்கள் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Snapdragon S4 தொழில்நுட்பத்தினாலான Processor, 2GB RAM, 8 மெகாபிக்சல் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல் உடைய துணைக்கமெரா ஆகியவற்றினையும் 32GB வரையான சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.