மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை
பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும்.
பிரித்தானியாவின் பாடசாலைகள் பலவும் இன்று (18) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து குறித்து பயணிகள் உறுதிப்படுத்தியதன் பின்னர் பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பள்ளத்தாக்கு போக்குவரத்துக்களும் மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப் பொழிவிலிருந்து மக்களது போக்குவரத்து பாதிப்பை குறைப்பதற்காக 130 பனியகற்றும் வாகனங்களும் 500 பணியாளர்களும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.