இராணுவத்தினருக்கு ஏன் தண்டனை வழங்குவதில்லை என்று அமெரிக்கத் தூதுவர் காணும் போதெல்லாம் என்னிடம் கேட்கின்றார் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் வளம் கிடையாது என்ற போதிலும், பூகோள கேந்திர முக்கியத்துவம் காரணமாக உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை மீது தாக்கம் செலுத்துகின்றன.
ஏதேனும் ஓர் பொறிமுறையின்றி இராணுவப் படையினருக்கு தண்டனை வழங்க முடியாது என நான் பதிலளிப்பேன்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவி விலக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ், வர்த்தக சம்மேளனத்தில் தெரிவித்துள்ளார் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.