கனடா மொன்றியல் வல்வை மக்கள் சங்கத்தின் 2013 ம் ஆண்டுக்கான குளிர்கால ஒன்றுகூடல் 2013.01.19 இரவு 7.45 இற்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. மங்கள விளக்கினை இந்து திருமதிகள் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாயை வணங்கி தமிழ்தாய் வாழ்த்தி இரு செல்விகளால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழ தேசிய கொடி வணக்கப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து தாயக மண் மீட்பு போரிலே வீ ர காவியமான மானமாவீரர்களுக்கும் மக்களுக்குமாக இரு மணித்துளிகள் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இவற்றினை அடுத்து விருந்தினர்களை வரவேற்கும் முகமாக வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு தொடர்ந்து வரவேற்பு நடனம் ஆடப்பட்டதுடன் மேடை நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகின. வரவேற்பு நடனத்தை தொடர்ந்து சிறப்பான அதிசயிக்கத்தக்க வகையில் சிறுவர்களால் யோகாசனம் செய்து காண்பிக்கப்பட்டது. இது பார்த்தவர்களைத் பலரை தூண்டும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடப்பட்டது.
இவற்றினைத் தொடர்ந்து பல அபிநய, பாரத நடனங்களும், தென்னிந்திய திரை இசைக்கான நடனங்களும்,தாயகப்பாடல்களுக்கான நடனங்களும், பாடல்களும் அரங்கை நிறைத்தன. அனைத்து நடனங்களும் பாடல்களும் கண்ணுக்கு குளிர்வாகவும் செவிக்கினிமையாகவும் பார்வையாளர்களால் உணரப்பட்டது.
இரவு 9.50 அளவில் இராப்போசனத்திட்கான நேரம் ஒதுக்கப்பட்டு இரவு 10.30 இற்கு மீண்டும் மேடையில் பல்வேறு வகை உடையலங்காரங்களை சிறுவர் முதல் விடலைப் பருவத்தினர் வரை அணிந்து வந்து உடையலங்கார கட்சியினை காண்பித்தலுடன் மீண்டும் மேடை களை கட்டியது. தொடர்ந்தும் பல்வேறு வகை நடனங்கள் பாடல்கள் என சென்ற கலை நிகழ்ச்சிகள் 12.10 அளவில் நிறைவுக்கு வர விழாவின் பிரதம விருந்தினர் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து விழாவுக்கு டொராண்டோவில் இருந்து வருகைதந்திருந்த அதிதி அறிவிப்பாளர் இராஜ முகுந்தன் அவர் பார்வையில் இன்றைய விழா பற்றி சிறப்புரையற்றினார்.
தொடர்ந்து சங்கம் சார்பில் நன்றியுரை இடம்பெற்று பரிசில்கள் வழங்கலுடன் விழா இரவு 1.00 மணியைத் தாண்டிய நிலையில் நிறைவடைந்தது.புகைப்படங்கள் விரைவில்….