விளையாட்டாக தற்கொலை செய்த சிறுவன் பரிதாப மரணம்!

லண்டனில் தற்கொலை செய்து கொள்ள போவதாக நாடகமாடிய சிறுவன், தூக்குகயிற்றில் சிக்கி பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன், கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் நியோகி மியர்ஸ், 39 மாற்றுத் திறனாளி. நடக்க முடியாத நிலையில்,சக்கர நாற்காலியில் வீட்டில் வலம் வருபவர்.

இவரது மகன், மரியோ ஐசக் மியர்ஸ், 12. பள்ளி மாணவனான ஐசக், குறும்பு தனம் நிறைந்தவன். இவன், சமீபத்தில் தன் தாயிடம் தூக்கு போட்டு கொள்ளப்போவதாக நாடகமாடினான். வழக்கம் போல், மகன் கிண்டலடிப்பதாக நினைத்து, அவனது தாய், பக்கத்து அறையில் இருந்தார்.

மகனை தேடி, சமையலறைக்குள் தனது சக்கர நாற்காலியில் வந்த தாய், மகன் தூக்கில் உண்மையிலேயே, தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகனின் அருகே சென்று, அவனை காப்பாற்ற பலவாறு முயற்சித்தார். ஆனால், அந்த தாய்க்கு அழுவதை தவிர வேறு வழியில்லாமல் போனது.

Leave a Reply

Your email address will not be published.