
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இன்னமும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் சுமார் 400 பேர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.ஏனையவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க பாதுகாப்புத் தரப்பினர் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.