எழுக தமிழ் நிகழ்வு நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மற்றையதொரு பேரணியும் யாழ் முற்றவெளி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் . மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், என்பனவும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.