வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டு அரங்கத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நேதாஜி A விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இப் போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் வல்வை உதய சூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி B விளையாட்டுக்கழகம் போட்டியிட்டது. இப் போட்டியில் உதய சூரியன் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.