ரத்தமிகு அழுத்த நோயில் உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் அதன் அறிகுறிகள் அவ்வளவாக வெளியில் தெரியாது. மற்ற நோய்களைப் போல் இந்தப் பிரச்சனைக்கு சிறப்பான கண்டுபிடிக்கும் தன்மையுள்ள அறிகுறிகள் கிடையாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நீண்ட நாள்கள்வரை நோயின் தன்மையை அறியாமல் சாதாரணமாக இருப்பார்கள். எனவேதான் இதை அமைதியான உயிர்க்கொல்லி நோய் (ஷிவீறீமீஸீt ரிவீறீறீமீக்ஷீ) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலும் இந்த நோயானது ஏதாவது மருத்துவப் பிரிசோதனையின்போதோ அல்லது வேலைக்கு ஆள் தேர்வு செய்யும்போது நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகளின் போதோதான் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் தலைவலி, படபடப்பு, நெற்றிப்பொட்டு, எலும்புப் பகுதியில் உள்ள தமனகள் துடித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். ஆனால் இந்த அறிகுறிகளைக் கொண்டு ரத்தமிகு அழுத்த நிலையை உறுதிசெய்ய முடியாது.
இந்த நோய் இருக்கிறது என்பதை எப்படி உறுதி செய்வது?
ரத்த மிகு அழுத்த நிலையைக் கண்டுபிடிக்க மிகச்சிறந்த முறை, ரத்த அழுத்தக் கணக்கீடு கருவியைப் பயன்படுத்தி நேரிடையாக ரத்தத்தின் அழுத்தத்தை அளவிடுவதுதான். இது மிகவும் எளிமையான, சிறந்த,நம்பகமான முறையாகும். இந்த முறையால் ரத்தமிகு அழுத்த நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தக்க மருத்துவச் சிகிச்சைகளின் மூலமாகக் கட்டுப்படுத்தாவிட்டால் இதயத்தில் மட்டுமின்றி உடலில் உள்ள முக்கியதான உறுப்புகளிலும் பலவகையான சிக்கல்கள் உருவாகக்கூடும்.
ரத்தமிகு அழுத்தத்தின் காரணமாக இதயத் தமனிகள் தடித்துச் சுருங்குவதால் இதய வலி ஏற்படும். மேலும் இதயத் தசைகள் தங்களுடைய இயற்கையான வலுவை இழப்பதால் உடலுக்குத் தேவையான ரத்தத்தை இதயம் செலுத்த முடியாத நிலையில் இதயச் செயலின்மை நிலை (பிமீணீக்ஷீt திணீவீறீuக்ஷீமீ) ஏற்படுகிறது.
மேலும் தக்க மருத்துவ முறைகளின் மூலமாக உரிய நேரத்தில் ரத்தமிகு அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. இன்னொரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், ரத்த மிகு அழுத்தத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
தக்க மருந்துகளைச் சாப்பிடுதல், உப்பைக் குறைத்துக் கொள்ளுதல், தக்க உடற்பயிற்சிகளைச் செய்தல், கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் தினசரி உணவில் கட்டுப்படுத்துதல், அடிக்கடி ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்தல் ஆகிய முயற்சிகளின் மூலமாக ரத்த மிகுஅழுத்த நோய் உடலில் எந்த வகையான சிக்கல்களையும் ஏற்படுத்தாதவாறு, நோயின் தன்மையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.