வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) முதலாவது நிர்வாகசபைக் கூட்டம் புதிய யாப்பிற்கு அமைய
20.01.2013 மிகவும் ஆக்கபுர்வமான செயற்திட்டங்கள் முன் வைக்கப்பட்டு அதை நேர்த்தியாகவும்
துரிதமாகவும் செயற்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது அதன் விபரங்கள்
1. நலன்புரி தொடர்பாக வல்வையில் உடனடித் தேவைகளை வல்வை ஒன்றியத்துடன் கலந்தாலேசித்து
பூர்த்தி செய்தல்.
2. இங்கு உள்ள எமது பிள்ளைகள் (uk), எதிர்காலத்தில் சிறந்த கல்விமான்களாக வரவேண்டும் என்பதனை கருத்திற்கொண்டு இது தொடர்பாக பலவிடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதற் செயற்பாடாக விரைவில் வர இருக்கும் 11+ Exam ற்கு, எமது இணையத்தில் கல்விக்கான பகுதியில் மாதிரி வினாத்தால்களுக்கான கேள்விகளுக்கு விடையளித்து, உங்கள் வினாத்தாலுக்கான புள்ளிகளையும் உடனே அறியும் வசதிகள் செய்யப்பட உள்ளது. எமது இணையத்தில் இவ் வசதி இலவசமாகவே பயப்படுத்திக் கொள்ள முடியும், மற்றும்11+ Tutor வசதியும் இலவசமாக கற்பிற்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்கள் பிள்ளைகள் பயன் பெற விரும்பம் உள்ளவர்கள் எமது மின்னஞ்சலுக்கு விபரங்களை தெரியப்படுத்தவும். எமது நோக்கமானது எம் வல்வைச் சமூகம் மேலும் கல்வியில் சிறந்தவர்களாக வரவேண்டும் என்பதே .
வல்வையில் உள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் உட்பட அவர்களின் தேவைகளை அறிந்து வல்வை ஒன்றியத்தின் ஊடாக அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பன முதல் கட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
3.கலை கலாச்சாரம் தொடர்பாக இங்குள்ள எமது பிள்ளைகளின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு
வருவதற்காக முதற்கட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இங் வருடம் அன்னபூரனியின்(கப்பல்) 75வது ஆண்டின் நினைவாக கலைநிகழ்வுகள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வுகள் ஒரு இடத்திலேயே பயிற்றுவிக்கப்பட உள்ளதால் ஆர்வம் உள்ள பிள்ளைகள்
உங்கள் பெயர் விபரங்களை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் என கேட்டுக் கொள்கின்றோம்.
4.பிரித்தானியாவில் வாழும் வல்வை மக்களிடம், வல்வை நலன்பரிச் சங்கத்தின் (ஐ.இ) அங்கத்துவ படிவம் பெற்றுக்கொள்ளும் வேலைகள், எங்கள் நிர்வாக சபை உறுப்பினர்களால் முன்னேடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வல்வையர்களும் இவ் அங்கத்துவ படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு தாழ்மையுடன் வல்வை நலன்புரிச் சங்கத்தினர் கேட்டுக் கொள்கின்றனர் .மேலும் இவ் அங்கத்துவ படிவங்களின் எண்ணிக்கை மூலமே எமது சிறந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும் என தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)