வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை, வல்வை விளையாட்டுக்கழகம் மூன்றாம் சுற்றுக்கு தகுதி

நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் நடாத்தும் Northern Challengers -2016 இன் இன்றைய (03-10-2016) போட்டியில்
இரண்டாம் சுற்றில் மணற்காடு சென் அன்ரனீஸ் A விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடிய வல்வெட்டித்துறை #வல்வை விளையாட்டுக்கழகம் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2.0 என்ற கோல் கணக்கில் சென் அன்ரனீஸ் A அணியை வீழ்த்தி வல்வை அணி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் வெல்லும் பட்சத்தில் வல்வை அணி #சுப்பர்_8 க்குள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றவொரு ஆட்டமான முதலாம் சுற்றில் நவசக்தி எதிர் மூன்றாம்பிட்டி சென் அன்ரனீஸ் இதில் சென் அன்ரனீஸ் அணி போட்டிக்கு சமூகமளிக்காததையீட்டு நடுவர்களால் நவசக்தி வி.கழகத்துக்கு வெற்றி வாய்ப்பளிக்கப்பட்டு #நவசக்தி வி.கழகம் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 


 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *