Search

ஒன்லைனில் புகைப்படங்களை பகிருவதற்கான சேவையை ஆரம்பிக்கின்றது Nikon

Nikon Image Space எனும் புகைப்படங்களை ஒன்லைனில் பகிருவதற்கான சேவையினை எதிர்வரும் 28ம் திகதி அன்று அறிமுகப்படுத்தவிருப்பதாக Nikon நிறுவனம் தெரிவித்துள்ளது.

“my Picturetown” எனும் தற்போதுள்ள சேவைக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்படும் இப்புதிய சேவையின் மூலம் பயனர்கள் தமது புகைப்படங்களை இலகுவான முறையில் தரவேற்றம் செய்துகொள்ள முடிவதுடன் அவற்றினை பகிர்ந்து கொள்ளும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

“Basic” மற்றும் “Special” என இரண்டு வகைகளை உள்ளடக்கியதாகக் காணப்படும் இச்சேவியில் “Basic” வகை மூலம் 2GB வரையான சேமிப்பு வசதியினை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் Nikon கமெராவினை சொந்தமாக கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு 20GB சேமிப்பு வசதியை வழங்கும் “Special” வகை சேவையும் காணப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published.