பிரிட்டனில் ஊழலை எதிர்த்து ஒரு ஆய்வறிக்கை சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. அதில் காவல்துறையில் நடக்கும் ஊழல் குறித்த தகவல்கள் இதில் பட்டியலிடப்பட்டன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டை சேர்ந்த துறை உயர் அதிகாரிகள் கழகம், இந்த அறிக்கையை Transparency International என்ற அமைப்பிடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டுள்ளன. உயர் அதிகாரிகள் சங்கத்தின் தகவல் தொடர்பாளரான மைக்கேல் கன்னிங்ஹாம் (Mr.Michael Cunningham) இச்சம்பவம் பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், பல அதிகாரிகள் தங்களின் உடல் வனப்பை அதிகரிக்க விரும்பி உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லுகின்றனர். அவ்வாறு செல்லும் போது அங்கு வரும் கிரிமினல்களிடம் “ஊக்கமருந்து” பெற்றதுடன், சில நேரங்களில் இந்த அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் சலுகைகள் பெற்றுள்ளதாகவும், பல இடங்களில் மிரட்டும் பாவனையில் நடந்துகொண்டதாகவும் “ஊக்க மருந்து” உட்கொண்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக மைக்கேல் கன்னிங்ஹாம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 43 பொலிஸ் பிரிவுகளில் கட்டுடன் வேண்டி உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்லும் அனைத்து அதிகாரிகள் மீது விசாரனை நடத்தப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இந்த வாரத்தின் இறுதியில் இந்த ஊழல் பிரச்சனை குறித்துப் பேச ,பொலிஸ் அதிகாரிகளில் கூட்டம் நடைபெறும். பொலிஸ் துறையை சார்ந்த ஊழியர்கள் ஊழலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு சில அறநெறிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும் எனவும் கன்னிங்ஹாம்(Mr. Michael Cunningham) தெரிவித்தார்.